மட்டு மாநகர முதல்வருடன், பெண்கள் அமைப்பினர் சந்திப்பு!

உள்ளூராட்சி மன்ற பெண்கள் அமைப்பினருக்கும், மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, குருநாகல் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் அமைப்பினருக்கும், மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு மாநகர சபையில் நேற்று நடைபெற்றது.

இணையம் தன்னார்வ அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் மட்டக்களப்பு, குருநாகல் மாவட்ட உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது சமுக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்புகள், மாநகரசபையின் வரவு செலவுத்திட்டங்களை தயாரித்தல் மற்றும் சபைத் தீர்மானங்களை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் பெண் உறுப்பினர்களின் பங்களிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலின்போது கருத்து தெரிவித்த முதல்வர், பெண்களுக்கு பாதுகாப்பான, சுதந்திரமான மாநகரமாக மட்டக்களப்பு மாநகரினை மாற்றியமைக்கும் நோக்கோடு பெண்கள், சிறுவர் நேய மாநகரமாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளின் முன்னேற்ற நிலை தொடர்பில் மாநகர முதல்வர் சுட்டிக் காட்டினார்.

பெண்கள் எதிர்காலத்தில் சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் பொது நல சிந்தனையோடு மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பெண்களை இணங்கண்டு அவர்களுக்கு அரசியலில் பொருத்தமான பொறுப்புகளை வழங்க வேண்டும்.

இந்த பாரிய பொறுப்பினை ஏற்று அவர்களை வழிநடாத்த பெண்கள் அமைப்புகளும் முன்வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!