சந்திரசிறி கஜதீரா பதிலாக மனோஜ் சிறிசேன

மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் நிலவிய வெற்றிடத்துக்கு மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரசிறிகஜதீரா அண்மையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குறித்த பதவிக்கு நிலவிய வெற்றிடத்தைத் தொடர்ந்தே இவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மனோஜ் சிறிசேன ஏற்கனவே தென் மாகாண விளையாட்டு, இளைஞர் விவகார, கலை, கலாசார, சமூக நலன்பேணல், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு, மகளிர் விவகார, வீட்டுப் பொருளாதார அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாணத்துறை, மனித வலு, தொழில்வாய்ப்பு அமைச்சராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!