யாழ் நகரை பசுமையாக்கும் திட்டம்!

யமகா நிறுவனத்தினரால் யாழ்ப்பாண நகரில் மர நடுகை திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யமகா நிறுவனத்தினரால், யாழ் நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மர நடுகை திட்டம் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியை சுற்றி மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு யாழ் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் முதன்மை விருந்தினராக கலந்து கொணடு, மர நடுகை திட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் மரக்கன்றை நாட்டினார்.

இதன்போது, யாழ் மாநகர பிரதி முதல்வர் ஈசன், யமகா நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!