வீடுகளுக்கான திறப்புக்கள் கையளிப்பு!

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் ஹிச்ராநகர் கிராமத்தில் அமைந்துள்ள ஜெய்கா 50 வீடுகளுக்கான திறப்புக்கள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீர் தலைமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா பிரதம அதிதியாக கலந்த கொண்டு பயனாளிகளிடம் வீடுகளுக்கான திறப்புக்களை கையளித்து இருந்தார்.

இவ் வீட்டுத்திட்ட தொகுதயில் 50 வீடுகள் தனித்தனியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டுத்திட்டத்திற்கான பாதைகள் ஆரம்ப வைத்தியசாலை மற்றும் பள்ளிவாசல் என மாதிரி கிராமமாக இவ் வீட்டுத்திட்டம் அமையப் பெற்றுள்ளது.

இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் இரண்டு படுக்கை அறைகள், வரவேற்பு மண்டபம் மற்றும் சமயல் அறை என வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ் வீடுகள் நீண்ட நாட்களாக நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பயனாகளிடம் வீட்டுக்கான திறப்புக்கள் அரசாங்க அதிபரால் கையளிக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீர், பிரதேச செயலக அதிகாரிகள் பொலிசார் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!