வவுனியாவில் விபத்து:இளைஞன் படுகாயம்!

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும், வானும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரிலிருந்து ஏ-9 வீதியூடாக பயணித்துக்கொண்டிந்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்டபோது அதே பாதையில் வந்து கொண்டிருந்த வான் மோட்டார் சைக்கிளுடன்மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான 22 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து வாகனத்தை அப்புறப்படுத்தியதுடன் அவ்விடத்திற்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இரு வாகனத்தினையும் போக்குவரத்து பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!