மட்டு, தனியார் பஸ் தரிப்பிடம், இன்று முதல் மக்கள் பாவனைக்கு

பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட, மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பிடத்தை, மக்கள் பாவனைக்கு கையளிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.

மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் சுபித்திபுரவர திட்டத்தின் முதலீட்டில், நகர் அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் நடைமுறையாகும் மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பிடம் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு, பெரு நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு நகருக்கு நீண்ட காலமாக இருந்து வந்த குறைப்பாட்டினை தீர்த்து வைக்கும் முகமாக, இந்த பஸ்தரிப்பிட கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.
65 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டடம் இரண்டு மாடிகளை கொண்டுள்ளது.

இதில் தரைமாடி பஸ் தரிப்பிடத்திற்காகவும், இரண்டாவது மாடி பொது மக்களின் வசதிக்காக சிற்றுண்டிசாலை வசதிகளுடன் இளைப்பாறும் இடமாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர், ஞா.ஸ்ரீநேசன், அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் பெரு நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பிடம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு நிகழ்வினை தொடர்ந்து பஸ் தரிப்பிட வளாகத்தில் மரக்கன்றும் அமைச்சர் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!