சர்வதேச நீர்ச்சறுக்கல் போட்டிக்கான மீளாய்வுக் கூட்டம்

அம்பாறை பொத்துவில் அறுகம்பையில் சர்வதேச நீர் அலைச்சருக்கல் போட்டிகள் வருடம் தோரும் நடைபெற்று வருகிறது.


சர்வதேச நீர் அலைச்சருக்கல் போட்டிகள் இம்மாதம் இடம்பெறவுள்ள நிலையில் அது தொடர்பான மீளாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

இக் கூட்டமானது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா தலைமையில் பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நீரலை சருக்கல் போட்டிகள் எதிர்வரும் 25ந் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், இப் போட்டியில் சர்வதேச ரீதியாக சுமார் 220 நீரலை சருக்கல் போட்டியாளர்கள் பங்கு பெற்றவுள்ளனர்.


இப்போட்டிகள் உள்ளுர் சர்வதேச போட்டியாளர்கள் என 2 பிரிவுகளாக இடம்பெவுள்ளதுடன், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ் மீளாய்வு கூட்டத்தில் பாதுகாப்பு, மின்சாரம், கலாசார ரீதியான உணவுகள் குடிநீர், சுகாதாரம் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பான இறுதி கூட்டம் எதிர்வரும் 20ந் திகதி உல்லையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ் மீளாய்வு கூட்டத்தில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.பண்டாரநாயக, சுற்றுலாத்துறை தவிசாளர், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீர், அறும்பை சுற்றுலாத்துறை அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ.றஹீம், இராணுவம், கடற்படை, பொலிசார் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!