மன்னார், புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் முத்திரை வெளியீடு !

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு, சாதனை பயண விசேட தபால் தலை வெளியீட்டு நிகழ்வுவும், சிறுவர் மாணவர் தலைவர்களுக்கான தினமும், இன்று நடைபெற்றது.


இந்நிகழ்வு, பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ரொஜினோல்ட் தலைமையில், பாடசாலையில் இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக, மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் கலந்துகொண்டார்.

புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு, 150 வருட பூர்தியை முன்னிட்டு, பாடசாலை சமூகம் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் சார்பாக, பல்வேறு கலாசார மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், 150 ஆண்டு சாதனை பயணத்தின் தேசிய அங்கிகாரத்திற்கு என, விசேட தபால் தலையானது, இலங்கை தபால் திணைக்கள முத்திரை விநியோக பணிப்பாளர் மீஹம மற்றும் தபால் திணைக்கள பிரசார பிரிவு அதிகாரி கே.கே.ஜே.பெரேரா முன்னிலையில், வெளியிட்டு வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட ரீதியில் வெளியீட்டு வைக்கப்படும், முதல் தபால் தலை இது என்பது குறிப்பிடதக்கது.


நிகழ்வில், மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் பிறட்லி, மன்னார் டிலாசால் சபை இயக்குனர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ், மன்னார் பிரதம தபால் அதிபர் அந்தோனிப்பிள்ளை சகாயசீலன் உட்பட ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நிர்வாக உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!