தேசிய மக்கள் சக்தி நாட்டை காப்பாற்றும் : அநுரகுமார

ஐக்கிய தேசியக் கட்சியினாலோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினாலோ, மீண்டும் நாட்டை காப்பாற்ற முடியாது என, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள, அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்ற, மக்கள் சபை தேசிய மக்கள் சக்தி என்ற தொனிப்பொருளிலான மக்கள் சந்திப்பு, குருநாகலில் இடம்பெற்ற இவ்வாறு குறிப்பிட்டார்.

‘ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பதாக முகமூடி அணிந்து வரும் வேட்பாளராலும்;, மக்களுக்காக நித்திரையை தியாகம் செய்யும் அரசியல்வாதிகளினாலும் மக்களுக்கே ஆபத்து ஏற்படுகிறது.

மீண்டும் எமது நாட்டில் ஆட்சிமுறையை மாற்றுவதற்கான ஜனாதிபதி தேர்தல் இந்த வருடத்திற்குள் நடத்தப்படவுள்ளது.
எமது நாட்டின் ஆட்சியை மாற்றும் தேர்தலாகும்.

மாறாக தூங்காதவர் யார் என்கிற போட்டியல்ல. வாக்களித்து தலைமைத்துவத்தை தெரிவு செய்த பின்னர், ஆட்சியாளர்கள் தமது ஆட்சிக்காலத்தில் செய்கின்ற நடவடிக்கைகளை, தெரிவு செய்கின்ற மக்களினால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின்ற நிலைமையே, நாட்டின் வரலாறு தோறும் ஏற்பட்டது.

நாட்டிற்கு ஏற்படுத்த வேண்டிய அத்தனை அழிவுகளும் ஏற்படுத்தப்பட்டு விட்டன. அனைத்து துறைகளும் வீழ்ச்சிகண்டுள்ளன. இன்னும் இந்த அழிவுகளை அனுமதித்தால், மக்களும் தாய்நாடும் முன்நோக்கி பயணிக்க முடியாது.

நாட்டை எவ்வாறு செய்ய முடியும்? நாட்டை மந்திரவாதியை போல மாற்ற முடியும் என்று சிலர் நினைக்கின்றனர். அதனால் காலத்திற்கு காலம் மாயாஜாலம் செய்வோர் தோன்றுகின்றனர்.

பல்வேறு முகமூடிகளை அணிந்து வருகின்றனர். ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவோம் என்று சிலர் வருகின்றனர். 80களில் ஏழைகளின் தோழன் என்றும், 1994 ஆம் ஆண்டில் விஹாரமகாதேவி முகமூடியை அணிந்து தோழி ஒருவரும், 2005 ஆம் ஆண்டில் துட்டகைமுனுவின் முகமூடியும், 2010 ஆம் ஆண்டில் அகிம்சைவாதி முகமூடியும், தற்போது புதிய சட்டம், ஒழுக்கத்தை முன்வைத்து முகமூடி அணிந்து முன்வந்திருக்கின்றனர்.

ஒருசிலர், ஏழைகளுக்காக தூங்காமல் சேவை செய்பவராக முன்வந்துள்ளனர். மக்களுக்காக 4 மணித்தியாலம் என சிறிது நேரம் யார் நித்திரை கொண்டாலும் பிரச்சினையில்லை.

அவர்கள் கண்விழித்துக் கொண்டிருப்பதுதான் மக்களுக்கான ஆபத்து நிறைந்த காலமாகும். அதனால் அவர்கள் நித்திரை கொள்வதே சிறந்தது.
இப்படிப்பட்ட நபர்களுக்குப் பின்னால் 70 வருடங்கள் மக்கள் பயணித்ததனால் நாடு அழிவை சந்தித்துவிட்டது. ஆகவே தனிநபரால் நாட்டை தூக்கியெடுக்க முடியாது.

மக்களின் ஒத்துழைப்புடனேயே அது நடைபெறும். அந்த மக்கள் முயற்சிதான் தேசிய மக்கள் சக்தியாகும். மக்களின் சொத்துக்களை அழிக்காத, மக்களின் துக்கத்தை தனது துக்கமான நினைக்கின்ற அரசியல்வாதியே அவசியம். அந்த சக்தியே ஜே.வி.பியின் பிரதிநிதித்துவமாகும்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!