சஜித்திற்கு அதிகாரத்தில் அமர்வதுதான் நோக்கம் : பியல்

நாட்டில் இடம்பெற்ற மத்திய வங்கி ஊழல் மோசடி மற்றும் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பேசாதா சஜித் பிரேமதாஸ, அதிகாரத்தில் அமர்வு குறித்து பேசுகின்றார் என, பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று, கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

எங்களுக்கு நன்கு தெரியும், சஜித் பிரேமதாச அறிவாளி அல்ல. பிரல்பல்யமானவரும் அல்ல. சஜித் பிரேமதாஸ தனது கட்சியை உடைத்துக் கொண்டு தலைவராகுதற்கு முற்படுவது, அதிவேகத்தில் தனது இலக்கினை அடைவதற்கு. அது முடியாத நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான வாக்குறுதிகளை, உறுதி மொழிகளை வழங்கி பேசி வருகின்றார். மிகவும் சிறிய அளவிலான சில்லறை வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார்.

இந்த வேளையில் நாமும் இந்நாட்டு மக்களும் அவரிடம் கேட்கும் விடயங்கள் சில இருக்கின்றன. இந்த நாட்டில் எப்பிரல் 21 இல் மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல் நடைபெற்றது.

300க்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்து போனார்கள். அவர்களின் உயிரிழப்பு தொடர்பில் சஜித் பிரேமதாசா நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள்?

கடந்த நான்கு அரை வருடங்களில், உங்கள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இருந்தது. உங்கள் கட்சித் தலைவர்களில் சிலர் இந்நாட்டு மக்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு பட்டப் பகலில் மத்திய வங்கியை கொள்ளையிட்டார்கள். அது தொடர்பில் சஜித் என்ன கூறப் போக்கின்றீர்கள்?

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை விற்றார்கள், எண்ணை தாங்கிகள் சிலவற்றை விற்றுள்ளார்கள். என்ன சஜித் கூறுகின்றார். இதுபோன்று நான்கரை வருட ஆட்சியில், நாட்டில் பல்வேறு களவுகள் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் சஜித் பிரேமதாச தாம் அதிகாரத்தில் அமர்வதை இலக்காகக் கொண்டு மட்டும் பேசி வருகின்றார். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!