கஞ்சிப்பானை இம்ரானை தந்தை கைது

சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் ரத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானை பார்க்க இன்று (12) மாலை வந்த உறவினர்களிடம் இருந்த சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றை சோதனையிட்டதில் அதில் இருந்து இரண்டு கைப்பேசிகள் மற்றும் இரண்டு சார்ஜர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரானை  இம்மாதம் 20 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!