ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூக் ஹக்கீம், திராவிடர் முற்போக்கு கழக தலைவர் மு.க.ஸ்ராலினை, சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியா சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த ரவூக் ஹக்கீம், அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்ட சபைத் தேர்தலில், தி.மு.க அமோக வெற்றியை பெற்றிருந்தமைக்கு, தமது வாழ்த்துக்களை தெரிவித்த ஹக்கீம், இது ஒரு சினேகபூர்வமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளார்.(சி)