பஹாமாஸை தாக்கிய சூறாவளி:2500 பேரை காணவில்லை!

பஹாமாஸை தாக்கிய சூறாவளியால் 2500 பேர் காணாமல் போயுள்ளனர்.

பஹாமாஸை தாக்கிய டொரியன் சூறாவளியினால் 2500 பேர் காணாமல் போயுள்ளதாக பஹாமாஸின் அவசர சேவைப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், டொரியன் புயல் தாக்கம் காரணமாக 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலர் காணாமல் போயுள்ளமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்காணவர்கள் பஹாமாஸை விட்டு வெளியேறியுள்ளனர்.

பேரழிவுக்கு உள்ளான தீவில் இருந்து ஆயிரக்கணக்காணவர்கள் வெளியேற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப்பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், புயல் தாக்கத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிரேட் அபாகோ மற்றும் கிராண்ட் பஹாமா ஆகிய தீவுகளில் இருந்து பலரும் வெளியேறக் காத்திருப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!