பயங்கரவாதம் சர்வதேச பிரச்சினை:நரேந்திர மோடி

பயங்கரவாதம் சர்வதேச பிரச்சினையாக காணப்படுவதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் சர்வதேச பிரச்சனையாக காணப்படுவதுடன், பயங்கரவாதத்தின் வேர்கள் அயல் நாட்டில் வளர்க்கப்படுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இந்தியப் பிரதமர் இவ்வாறு கூறினார்.

‘பயங்கரவாதம் இன்று ஒரு தத்துவமாக மாறி உள்ளதாகவும், இது ஒரு சர்வதேச பிரச்சினையாகவும், உலகளாவிய அச்சுறுத்தலாகவும் மாறிவிட்டதாக கூறினார்.

பயங்கரவாதத்தின் வலிமையான வேர்கள் அனைத்தும் நமது அண்டை நாட்டில் வளர்க்கப்படுவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாதத்துக்கும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்போருக்கும் எதிராக உலக நாடுகள் உறுதிமொழி ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்தியப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா முழுத்திறமையுடன் உள்ளதாகவும், ஏற்கனவே இதை நிரூபித்துள்ள தாங்கள் எதிர்காலத்திலும் அதை வெளிப்படுத்துவோம் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!