மலசலகூடம் அமைப்பதற்கு நிதி உதவி!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடந்தகால அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, மலசலகூடங்கள் அமைப்பதற்கு நிதி வழங்கும் நிகழ்வு நேற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கலந்துகொண்டு மலசலகூடத்திற்கான நிதியினை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், பிரதேச சபை பிரதி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மலசலகூடம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட121 குடும்பங்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

புனர்வாழ்வு, மீள் குடியேற்ற அமைச்சிடம், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!