இலங்கை அணியின் தலைமை திரிமன்னேவிடம்!


பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை திரிமன்னே மற்றும் சானக தலைமை தாங்கவுள்ளனர்.

பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை அணியின் முதன்நிலை வீரர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், திரிமன்னே மற்றும் சானக ஆகியோர் அணித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கு திரிமன்னே தலைமைப் பொறுப்பை வகிக்கவுள்ளதோடு, இருபதுக்கு-20 போட்டிகளுக்கு இலங்கை அணியை சானக வழிநடத்தவுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் அழுத்தம் காரணமானவே இலங்கை அணியின் முன்னிலை வீரர்கள் பாகிஸ்தான் தொடரை புறக்கணித்தனர் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டிய நிலையில், அதனை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மறுத்திருந்தார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!