மழையுடன் கூடிய காலநிலை நிலவும்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரை பலத் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு, அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!