விசாரணைகளுக்கு பயந்து, நாட்டை விட்டு ஓடியவரை நம்பி எப்படி நாட்டை கொடுப்பது : ஹந்துநெத்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என, மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

இன்று, மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

கோட்டபாய ராஜபக்ஷவை கூறுவதற்கு எதுவும் இல்லை. மகிந்தவின் குடும்பத்தில் ஒரு செல்லாக்காசாக இருந்தவரே கோட்டபாய ராஜபக்ஸவாகும்.

கோட்டபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதே, மகிந்த அவர்கள் தோல்வியடைந்ததை வெளிப்படையாக வெளிப்படுத்தியுள்ளது.

காரணம் இவர் ஒரு அமெரிக்க பிரஜை. இலங்கையுடன் எந்த தொடபும் இல்லை. குறைந்தபட்சம் பிரதேச சபை உறுப்பினராககூட இவர் இருந்ததில்லை.
அரசியல் தொடர்பான எந்தவிதமான அறிவும் இல்லை. அரசியலில் மகிந்த ராஜபக்ஸவின் சகோதரர் என்ற அடையாளம் மட்டுமே உள்ளது.

இவர்கள் இனவாதம் மற்றும் மதவாதத்தை கையிலெடுத்து, தமது அரசியல் இலாபத்தினை நோக்காக கொண்டுள்ளனர். இந்த இனவாதத்தை தூண்டுவதற்கு, தீவிரவாதிகளுக்கு பணம் வழங்கிய விடயங்கள் எல்லாம் இன்று உறுதிப்படுத்தப்பட்டு;ள்ளது.

அதேபோன்று அரச நிதிகளை மோசடி செய்தது தொடர்பில், இன்று பல வழங்குகள் நடைபெற்று வருகின்றன. அரச நிதியை தமது சொந்த நலன்களுக்கு பயன்படுத்தியவர்கள், எவ்வாறு இந்த நாட்டின் தலைவராக வர முடியும்.

பல வழக்குகள் உள்ள ஒருவருக்கு, வேட்பாளர் பதவியை கொடுக்க வேண்டாம் என்று, சகல மதத்தலைவர்களும் கையொப்பம் இட்டு கடிதம் வழங்கிய போதிலும், வழக்கு இருக்கும் போது, நாட்டை விட்டு ஓடிய ஒருவருக்கு, எவ்வாறு இந்த நாட்டின் தலைமைப் பதவியை வழங்குவது. இவருக்கு இந்த நாட்டின் தலைமை பதவியை வழங்குவதற்கு மக்கள் விரும்ப மாட்டார்கள்.

கோட்;டபாயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததானது, மகிந்தவின் முகாமில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
கையாலாகாத ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த நியமித்துள்ளார்.

கோட்டபாயவை ஒப்பிடும் போது, 19 வருடமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, தன்னால் முடிந்தளவுக்கு மக்களுக்கு சேவை வழங்கியுள்ளார், எங்களது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்க.

அரச நிதியையோ, மக்கள் நிதியையோ, ஒரு ரூபா கூட கொள்ளையடிக்காத ஒருவரையே நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவந்துள்ளோம்.
இதுவரையில் மோசடி ரீதியான வழக்கோ மோசடி தொடர்பான விசாரணைகளோ இல்லாத ஒருவரே எமது ஜனாதிபதி வேட்பாளராகும்.
எந்தவேளையிலும் மக்கள் பக்கத்தில் சென்று கதைக்க கூடிய ஒரு தலைவரே அவர்.

தமிழ் முஸ்லிம் மக்களை ஒரே பார்வையில் பாக்ககூடிய தலைவராகும். கோட்டபாய ராஜபக்ஸவின் காலத்தில், ஆள் கடத்தல்கள், வெள்ளை வான், கொலை மிரட்டல்கள் இடம்பெற்ற காலத்தில், இவர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக துணிந்து நின்று செயற்பட்டவர்கள் நாங்கள். அவர்களை தேர்தலில் தோற்கடித்தவர்கள் நாங்களாகும். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!