பசுபிக்கின் இராணுவ சமநிலையை மாற்றியமைக்க, அமெரிக்கா நடவடிக்கை!

பசுபிக்கின் இராணுவ சமநிலையை அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றியமைக்க கூடிய நவீன ஏவுகணை ஒன்றுடன், அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்று, பசுபிக்கில் நடமாடுகின்றது என, ஆய்வார்கள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் கப்பிரியலி கிவ்வொட்ஸ் என்ற போர்க்கப்பல், அமெரிக்க கடற்படையின் அதிநவீன ஏவுகணையுடனும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானத்துடனும், கடந்த மாதம் சான்டியாகோவில் இருந்து புறப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய ஏவுகணை, ராடர்களின் கண்களில் தெரியாமல், எதிரிகளின் பாதுகாப்பு நிலைகளை தவிர்த்து செல்லக்கூடிய திறன் உடையது என, அமெரிக்காவின் ஆயுத தயாரிப்பு நிறுவனமான ராய்தியோன் தெரிவித்துள்ளது.

புதிய ஏவுகணை, 100 மைல்களுக்கு அப்பால் செல்லக்கூடியது எனவும், ஹெலிக்கொப்டர்களில் பொருத்தி இதனை பயன்படுத்துவதால், கப்பல்கள் தங்கள் ராடர்களுக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் குறிவைக்கலாம் எனவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளில்லாமல் இயங்க கூடிய ஹெலிக்கொப்டர்களில் இவற்றை பொருத்தி பயன்படுத்தலாம் எனவும், தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வகை ஆவணங்களை அமெரிக்கா பயன்படுத்த ஆரம்பித்துள்ளதை உறுதி செய்துள்ள கடற்படை அதிகாரி ஒருவர், அமெரிக்க கடற்படையின் தாக்குதல் வல்லமையை இது அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

பசுபிக்கில், சீனாவின் படைப்பலத்தை எதிர்கொண்டு மோதி தப்பிக்ககூடிய படைப்பலத்தை, அமெரிக்காவின் பென்டகன் உருவாக்கிவருகின்றது என, பாதுகாப்பு ஆய்வாளர் திமோதி ஹெத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா குறிப்பிட்ட வகை ஏவுகணையை கப்பலில் நிறுவியுள்ளமை, முக்கியமான செய்தியை தெரிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு ஆய்வாளர் கார்ல் ஸ்கூஸ்டர், மேற்கு பசுவிக்கில் தற்போது சீனா செலுத்தி வரும் ஆதிக்கத்தை, இது இறுதியில் முறியடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

பசுவிக்கில், சீனாவே தற்போது குறூஸ் ஏவுகணைகளில் அதிக பலம் பொருந்தியதாக காணப்படுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

பசுபிக்கில் காணப்படும் சமநிலையை சரிசெய்வதற்கான அமெரிக்காவின் முதல் முயற்சியில், எதிர்காலத்தில் மேலும் பல நடவடிக்கைகள் இடம்பெறலாம் எனவும், பாதுகாப்பு ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!