வவுனியாவில், கள்ளுத்தவறணையை அகற்றக் கோரிக்கை!

வவுனியா கந்தன்குளம் கிராமத்தில், மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில், நீண்ட நாட்களாக இயங்கி வந்த களுத்தவறணையை அகற்றக்கோரி, இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பூவரசங்குளம் கிராமர் சேவகர் பிரிவுக்குட்பட்ட, கந்தன்குளம் சந்தியில் இயங்கி வரும் கள்ளுத்தவறணையினால், புலவர் நகர், குருக்கள் ஊர், கந்தங்குளம், பூவரசங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளுத்தவறணையை உடனடியாக அகற்றக் கோரி, இன்று காலை 10.00 மணியிலிருந்து மதியம் 12.00 மணிவரை, கந்தன்குளம் சந்தியில் பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களும் இணைந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது, கந்தன்குள சந்தியை கள்ளுக்கடை ஆக்காதே..!, பேரூந்து தரிப்பிடத்துக்கு முன்பாக கள்ளுக்கடை அமைப்பது முறையானதா?, பாடசாலை போகும் வழியில் கள்ளுக்கடை வேண்டாம்?, கிராமத்தின் நுளைவாயிலில் கள்ளுக்கடை வேண்டாம்?, வேண்டாம் கள்ளுக்கடை வேண்டும் நூலகம்? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

போராட்டம் தொடர்பில், வவுனியா பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், தொலைபேசியில் உரையாடிய பிரதேச செயலாளர், கள்ளுத் தவறணையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!