மன்னாரில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விசேட நிகழ்ச்சித் திட்டம்

இன, மத ரீதியான வேறுபாடுகளை, அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடியவிழுமிய பண்புகள் ஊடாக செயற்படுத்தி, நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், மன்னாரில் விசேட செயலமர்வு நடத்தப்பட்டுள்ளது.


ஆசிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில், சர்வோதயம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பங்களிப்புடன், இளைஞர்களுக்கான செயலமர்வு நடத்தப்பட்டது.

அனைத்து மதங்கள் மற்றும் இனங்கள் மத்தியில் காணப்படும், பொதுவான விழுமியப் பண்புகள் ஊடாக, சமூகத்தில், முரண்பாடுகள், பாரபட்சம், வன்முறைகள் ஏற்படுவதை குறைப்பது தொடர்பாகவும், முரண்பாடுகள் ஏற்படுகின்ற சமயத்தில், இளைஞர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும், விரிவுரைகள் மூலமும் நடைமுறை பயிற்சிகள் மூலமும் தெளிவுபடுத்தப்பட்டது.


ஆசிய ஒன்றிய பயிற்சி வழங்குனர்களான றம்சி மற்றும் தெவுனி ஆகியோர் விரிவுரைகளை வழங்கியதுடன், பயிற்சிகளை பெற்றுக்கொண்ட இளைஞர்கள், தொடர்சியாக மாவட்ட ரீதியில் உள்ள இளைஞர்கள் யுவதிகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.


இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 10 மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் யுவதிகளுக்கு, பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்கள் ஊடாக, ஏனைய இளைஞர்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!