எழுக தமிழ் பேரணிக்கு, யாழ், பல்கலை பேராசிரியர்கள் சங்கம் ஆதரவு!

யாழ்ப்பாணத்தில், எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள, எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.


இது தொடர்பில், இன்று அறிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் தலைமையில், 16 ஆம் திகதி, யாழ். முற்றவெளியில் இடம்பெறவிருக்கின்ற எழுக தமிழ் பேரெழுச்சிக்கு, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு வழங்குவதென, கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற, ஆசிரியர் சங்க விசேட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில், சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடாத்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடாத்து, வடக்கு கிழக்கு இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக் குடியமர்த்து ஆகிய கோசங்களை முன்னிறுத்தி, எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடத்தப்படவுள்ளது.

இந்தக் கோரிக்கைகளின் முக்கியத்துவம் கருதி, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவளிப்பதென தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அரசியற் கட்சி சார்பற்ற ஓர் அமைப்பாகும். எனவே யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், எழுக தமிழிற்கு வழங்குகின்ற ஆதரவானது, மக்கள் இயக்கம் ஒன்றின், மக்கள் சார் செயற்பாட்டிற்கான ஆதரவே அன்றி, கட்சி அரசியல் சார்ந்தது அன்று என, ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!