வீதி அபிவிருத்தி அதிகார சபையின், மட்டு. வாசஸ்தலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வாசஸ்தலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, மட்டக்களப்பு வாசஸ்தல பகுதியில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க, புகையிரத நிலைய ஒழுங்கையானது துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் அவ்வீதியில் அமைந்துள்ள, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வாசஸ்தலம் ஒன்று முற்றாக அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த கட்டிடத்தினை வேறு ஒரு இடத்தில் புதிதாக அமைப்பதற்கான நிதியைப் பெற்றுத் தருமாறு, மாநகர முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் துரித கிராம அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக 3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வாசஸ்தலத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியிலாளர் கலை வாணி வண்ணியசிங்கம், பொறியியலாளர் பத்மராஜா, மாநகர பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கான வே.தவராஜா, ம.ரூபாகரன், இவேட்டின் சந்திரகுமார், சீ.ஜெயந்திரகுமார், குஜாஜினி பாலகிருஸ்ணன் ஆகியோருடன் மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!