வவுனியாவில், பொது வைத்தியசாலை வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால், நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள், இன்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டம், இன்று மதியம் 12.30 மணியளவில், வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, வட கிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா?, விரைவில் இங்கு பாரிய வைத்தியர் பற்றாகுறை, இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை, போராட்டகாரர்கள் ஏந்தியிருந்தத்துடன், கோசங்களையும் எழுப்பி, பேரணியாக சென்றனர்.

வடக்கு கிழக்கில், வைத்தியர்களின் இடமாற்றத்தின் போது, புதிய முறை ஒன்றை உட்புகுத்துவதற்கு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின முனைகின்றார் என, வைத்தியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!