வவுனியாவில், பொது மக்களால் முறியடிக்கப்பட்ட தாக்குதல் சம்பவம்!

வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள், வாளுடன் புகுந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூன்று இளைஞர்களை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிலிலுள்ள ஒருவருக்கும், தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த இளைஞர்களுக்குமிடையே நேற்றுக் காலை வேளையில் வீதியில் சிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பின்னர் குறித்த இளைஞர்கள் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில், வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் வாளுடன் சென்ற மூன்று இளைஞர்கள் வீட்டாரை வெளியே வரவழைத்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும், எனினும் இத்தாக்குதல் சம்பவம் அயவர்களினால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூன்று இளைஞர்களையும், அயலவர்களும், கிராம இளைஞர்களும் இணைந்து மடக்கிப்பிடித்து வீட்டுக்குள் அடைத்து வைத்து 119 தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் மூன்று மணிநேரம் கடந்தும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனவும், அதன் பின்னர் கிராம பொது அமைப்புக்கள், இரு தரப்பினருடனும் கலந்துரையாடி இணக்கத்திற்கு வந்து, இளைஞர்கள் கொண்டு வந்த வாளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த இளைஞர்கள் தாம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடமாட்டோம் என கிராம பொது அமைப்புக்கள் மற்றும் அயலவர்கள் முன்னிலையில் தெரிவித்தமையினையடுத்து பொதுமக்களால் விடுவிக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!