யாழ், புகையிரத நிலையத்தில் வழிப்புணர்வு பதாகை !

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏனைய பொதுமக்கள் சந்திக்கும் அசௌகரியங்களை தடுக்கும் வகையில் விசேட அவதான அறிவிப்பு பலப்பலகை ஒன்று யாழ், புகையிரத நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

குறித்த அவதான அறிவிப்பு பலகையானது, பிரித்தானிய தூதுவராலயமும் சுற்றுலாப் பொலிஸாரும் இணைந்து நாடளாவிய ரீதில் பல்வேறு இடங்களில் நிறுவி வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய தினம் பிரித்தானிய தூதுவராலய அதிகாரிகள், சுற்றுலாப் பொலிஸார் இணைந்து யாழ்.புகையிரத நிலையத்தில் குறித்த அவதான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தனர்.

குறித்த அவதான எச்சரிக்கை பெயர்பலகையில், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் ஆபத்து தொடர்பில் சுற்றுலாப் பொலிஸாருக்கு அறிவிக்கக்கூடியதான தொலைபேசி இலக்கம், அவசர பொலிஸ் தொடர்பு இலக்கம் மற்றும் எச்சரிக்கை வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக சுற்றுலாப் பயணிகளின் பயணப்பொதிகள், ஆவணங்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில், இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தில் இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரித்தானிய தூதரக அதிகாரிகள், யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், சுற்றுலாப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!