வவுனியா வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் இன்றையதினம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த தகவல் கிடைக்கபெற்றநிலையில், வவுனியா வைத்தியசாலைக்கு மோப்பநாய் சகிதம் சென்ற வவுனியா பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள், பொதுமக்கள் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவளை கடற்படையினரால் வவுனியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்று நாளை ஆளுனரது பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!