பொத்துவில் வி.அ.த.க பாடசாலையில் இரு மாடிக்கட்டடம் திறப்பு!

அம்பாறை பொத்துவில் விபுலானந்தா அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இரு மாடிக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்;டத்திற்கமைய நேற்று முதல் நாடளாவிய ரீதியில் 500 பாடசாலை கட்டடங்கள் தேசிய ரீதியில் திறந்து வைக்கப்படுகின்றன.

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பொத்துவில் விபுலானந்தா அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 7 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்பட்ட சகல வசதிகளையும் கொண்டதான இரு மாடிக்கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் ஏ.சுனிதாதேவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகள் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து பாண்ட் வாத்திய இசையுடன் அதிதிகளை வரவேற்றனர்.

நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக திருக்கோவில் கல்வி வலய பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், சிறப்பு அதிதிகளாக பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாசித், கோட்டக் கல்விப்பணி;ப்பாளர் எஸ்.ரவீந்திரன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.சுரேன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!