பாரதியாரின் 98 ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

மகாகவி பாரதியாரின் 98 வது நினைவு தினம் வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள அவரது உருவச் சிலை முன்பாக இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் செயலாளர் இ.தாயாபரன் தலைமயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாரதியாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரது தமிழ் பற்று மற்றும் சுதந்திர வேட்கை தொடர்பான கருத்துரைகளை தமிழருவி சிவகுமாரன் மற்றும் தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராசா, க.சந்திரகுலசிங்கம், ரி.கே.ராஜலிங்கம், பா.பிரசன்னா, சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், பொதுஅமைப்பினர், சமூக ஆர்வலர்கள், அப்பகுதி வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!