மருத்துவத்துறை மாணவர்கள் 1500 பேருக்கு பயிலுனர் நியமனம்!

மருத்துவத்துறை மாணவர்கள் 1500 பேருக்கு பயிலுனர் வைத்தியர்களாக பணியாற்றுவதற்கான நியமனம் இன்று வழங்கப்படவுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டத்துக்கான பாடநெறியை நிறைவு செய்த 1500 மருத்துவத்துறை மாணவர்களுக்கு பயிலுனர் வைத்தியர்களாக பணியாற்றுவதற்கான நியமனம் இன்று வழங்கப்படவுள்ளது.

இதற்கான நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!