மக்கள் சட்டங்களை அறிய வேண்டும்:தலதா அத்துகோரள

மக்கள் நாட்டிலுள்ள சட்டங்களை அறியாமல் உள்ளதால் தவறுகள் இடம்பெறுவதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

மக்கள் நாட்டிலுள்ள சட்டங்களை அறியாமல் உள்ளதால்த்தான் தவறிழைப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதனால் சிறைச்சாலைகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி கஹவத்தை ஆரம்ப பாடசாலையில் இரண்டு மாடிக்கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே நீதி அமைச்சர் தலதா அத்துகோரள இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்குவது தடை செய்யப்படும் என்றும் கூறினார்.

நாம் மனிதர்களாக முன்னேறிச் செல்வது அவசியம் என்று குறிப்பிட்ட நீதி அமைச்சர், பிள்ளைகள் மிலேச்சத்தனமானவர்களாக வளர்ந்து விடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டக் கல்வியை பாடசாலைக் கல்வியில் உட்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதால், அது தொடர்பான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் ஆரம்பித்து கல்விப் பொது தராதர உயர் தரத்தில் இதனை ஒரு பகுதியாக உட்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!