வேட்பாளர் தொடர்பில் விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு: ஹரின் பெர்னாண்டோ

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இன்னும் சில நாட்களில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இன்னும் சில நாட்களில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று இரவு அலரிமாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருந்ததை அடுத்து அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஹரின் பெர்னாண்டோ, ‘ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவும் மூத்த உறுப்பினர்களும் இணைந்து சில நாட்களில் சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவரத்தை நடத்துவார்கள் என்று கூறினார்.

இதேவேளை, சிறுபான்மை கட்சிகளுடனான சந்திப்புகள் வெற்றிகரமாக நடைபெறும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!