காஸ்மீர் குறித்த சீனா பாகிஸ்தான் கூட்டறிக்கை இந்தியா நிராகரித்துள்ளது

காஷ்மீர் தொடர்பில் பாகிஸ்தான்-சீனா இணைந்து வெளியிட்ட அறிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

சர்ச்சைக்குரிய காரஸ்மீர் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான்-சீனா இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன வெளிவிவகார அமைச்சர், சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற பின்னர் பாகிஸ்தானும், சீனாவும் காஷ்மீர் பற்றி கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

இதனை தாங்கள் நிராகரிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

‘சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை’ என்ற பெயரிலான ஒரு திட்டத்தை அந்த நாடுகள் அறிவித்துள்ளன.

இந்த பாதை இந்திய எல்லையில் பாகிஸ்தான் 1947ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியில் வருகிறது.

இதற்காக பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்தள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போதுள்ள நிலையை மாற்றும் வகையில் வேறு எந்த நாடு முயன்றாலும் இந்தியா தயக்கமின்றி எதிர்க்கும் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளை இரு நாடுகளும் கைவிட வேண்டும் எனவும் ரவீஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!