இந்திய அணி தொடர்பில் தவறான செய்திகள்:ரவிசாஸ்திரி


இந்திய அணியில் முரண்பாடுகள் உள்ளதாக எழும் செய்திகளை இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் மறுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் ஹோக்லிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதாக வெளிவரும் செய்திகளை

இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரி மறத்துள்ளார்.

டுபாய் நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

5 ஆண்டுகளாக வீரர்கள் அறையில் நானும் இருந்து வருகிறேன். அவர்கள் ஒவ்வொருவருடைய அணுகுமுறையையும் நான் கவனித்து உள்ளேன்.

அவர்கள் அனைவரும் தங்கள் பணியை உணர்ந்து செயல்படுவதுடன், அணியின் தேவையை கச்சிதமாக பூர்த்தி செய்து வருகிறார்கள்.

விராட்ஹோக்லியுடன் கருத்து வேறுபாடு இருந்திருந்தால் ரோகித் சர்மாவால் இந்த உலக கோப்பை போட்டியில் 5 சதங்கள் எப்படி அடித்திருக்க முடியும்.

இருவரும் இணைந்து சிறப்பான இணைப்பாட்டத்தை அளித்து இருக்க முடியுமா? வீரர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு உள்ளது.

விராட் ஹோக்லி, ரோகித் சர்மா இடையே பிளவு நிலவுவதாக கூறுவது முற்றிலும் முட்டாள்தனமானது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணி மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டு வருகிறது.

இந்த மாதிரி நன்றாக விளையாடும் அணிக்கு ஆதரவாக எல்லோரும் இருக்க வேண்டியது முக்கியம்.

அதனை விடுத்து தொல்லை கொடுக்கக்கூடாது.

இந்திய அணி இதுபோல் நிலையாக சிறப்பான ஆட்டத்தை அளித்ததை நான் ஒருபோதும் பார்த்தது கிடையாது.

1980-களில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 2000-ம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அணியும் அபாரமாக செயற்பட்டது போன்று இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது.

அதனை ஏற்கனவே செய்ய தொடங்கி விட்டோம்.

20 ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயற்பட்டு வருகிறோம் என்றும் ரவிசாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!