அளம்பில் றோ.க வித்தியாலயத்தில் கற்றல்வள நிலையம் திறப்பு!

முல்லைத்தீவு – அளம்பில் றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வி கற்றல் வள நிலைய கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்தபாடசாலை’ என்னும் செயற்றிட்டத்தில் அமைக்கப்பட்ட ஆரம்பக்கல்வி கற்றல் வள நிலையமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் முதல்வர் ந.அல்பிரட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்பக்கல்வி கற்றல் வள நிலைய கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன.

இக் கற்றல்வள நிலையமானது செயற்பாட்டறை, வாசிப்பறை, மொழி ஆய்வுகூடம் என மூன்று பிரிவுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, கற்றல் வள நிலையத்தின் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்ததுடன், செயற்பாட்டறையை நாடாவை வெட்டித் திறந்துவைத்தார்.

அதேபோல் மொழி ஆய்வுகூடத்தை வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் திறந்துவைத்தார்.

வாசிப்பறையை முல்லை வலயக்கல்விப் பணிப்பாளர் உமாநிதி புவனராஜா திறந்துவைத்தார்.

கட்டடத் திறப்பினைத் தொடர்ந்து மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறீஸ்கந்தராசா, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லை வலயக்கல்விப் பணிப்பாளர் உமாநிதி புவனராஜா, முல்லைத்தீவு கட்டடங்கள் திணைக்கள பொறியியலாளர் விவேகானந்தன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன், அமலதாஸ், கோட்டக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பங்குத் தந்தை, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!