04 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

நெடுந்தீவுக்கு மேற்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது காரைநகர் கடற்படையினரால் இந்தியாவின் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதான மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துவரப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள உயர் அதிகாரிகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தி இருந்தனர்.

குறித்த வழக்கினை ஆராய்ந்த நீதவான் ஏ.யூட்சன் நான்கு மீனவர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!