கலந்துரையாடல் சுமுகமாக இடம்பெற்றது-சஜித் பிரேமதாஸ

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடல் மிகவும் சுமுகமாக இடம்பெற்றது என பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

நடந்து முடிந்த சந்திப்பின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காண முடியும்
மேலும் எதிர்கால சவால்கள் குறித்தும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்தும் இன்றைய கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விடயங்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்தும் எதிர்காலத்தில் அறிவிப்போம்.

ஒட்டுமொத்தமாக இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாகவும் ஆரோக்கியமானதாகவும் இடம்பெற்றது.

இதேவேளை, இன்றைய கலந்துரையாடலின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காணமுடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, கபிர் ஹசிம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.(சே)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!