ரணில் சஜித் இன்று சந்திப்பு !

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில், இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக, கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றி பெற புதிய வியூகம் அமைப்படுவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

அத்துடன், தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, கட்சியின் தலைவரும் பிரதித் தலைவரும் இணைந்து பிரசாரங்களை முன்னெடுப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நகர்வுகள் தொடர்பில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சை தொடர்கின்ற நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று இரவு 9.00 மணிக்கு பின்னராக இடம்பெறலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!