முன்னிலை சோஸலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரானார், துமிந்த நாகமுவ

அரசாங்கம், காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு, இதுவரை தீர்வை வழங்கவில்லை என, முன்னிலை சோஸலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல், கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

2018 ஆம் ஆண்டு, அரசியலமைப்பு சூழ்ச்சி ஊடாக மஹிந்த ராஜபக்ச ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்த போதிலும், நீதிமன்ற தலையீட்டினால் அது முடியாமற்போனது.

இப்போது ஜனாதிபதி தேர்தலின் ஊடாக, கோட்டாபய ராஜபக்சவை முன்நிறுத்தி, ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியை தொடர்கின்றார்.
நாட்டிற்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பதாக, பொதுஜன பெரமுன ஜனாதிபதி கோட்டபாய கூறுவது வேடிக்கையானது.

கோட்டபாய எவ்வாறு தேசிய பாதுகாப்பை உறுதி செய்தது மற்றும் ஒழுக்கத்தை அமுல்படுத்தியது என்பது மக்கள் அறிவார்கள்.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டமை, லசந்த மற்றும் எக்னலிகொட தொடர்பான விசாரணைகள், எமது லலித் குமார், குகன் ஆகியோர் இன்னும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒழுக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றி கோட்டபாய கூறும் போது, மக்கள் முன்பாக இதெல்லாம் தோன்றுகின்றது. ஏப்ரல் 17 ஆம் திகதியே, அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான விண்ணப்பத்தை அவர் வழங்கியிருக்கின்றார்.

அடுத்த பக்கம் சஜித், கரு, ரணில் என்கின்றார்கள். அவர்கள் நான்கரை வருடங்களாக ஆட்சி புரிந்த முறையை அவதானித்தோம். நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவோம், காணாமலாக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி வழங்குவோம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்றார்கள்.

ஆனால் இன்னும் கிளிநொச்சி உட்பட வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புகைப்படங்களை ஏந்தியவாறு போராட்டங்களை தொடர்கின்றனர்.

இறுதியில், ரணில் விக்ரமசிங்க அரசில் உள்ளவர்கள், கடந்த காலத்தில் அவற்றை நிறைவேற்ற முடியாத நிலையில், எதிர்வரும் காலத்தில் மாற்றத்தை கொண்டு வருவதாக கூறி வருகின்றனர்.

அதேபோன்று முதலாளித்துவத்தின் பாதிப்பை அறிந்து கொண்டவர்கள், சமூகவாதத்தையும் ஏற்காமல், தற்போது நடுநிலை வழியை அறிவிக்கிறார்கள்.
நடுநிலைவாதம் என்ற புதிய ஒன்றை அறிவித்து வருகிறார்கள்.

எனவே நாட்டில் உள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை தீர்ப்பதே முக்கியமாகும். அதற்காக எமது கட்சி சமூகவாத வேட்பாளர் ஒருவரான தோழர் துமிந்த நாகமுவவை களமிறக்குகின்றது. சமூகவாதத்தை யதார்த்தப்படுத்தும் திட்டத்தை அவர் ஊடாக முன்னெடுப்போம்’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!