நுவரெலியாவில், ஆற்றில் தவறி விழுந்து, இளைஞன் பலி

நுவரெலியா கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவில் உள்ள ஆற்றுப்பகுதியில், இளைஞன் ஒருவர், இன்று காலை தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த தோட்டத்தில், இளைஞன் தனது பயிர்ச் செய்கையை பார்வையிட்டு வீடு திரும்பும் சந்தர்ப்பத்தில், இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தவறி விழுந்த இளைஞனை, உடனடியாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், வழியில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக, பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன் போது, வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவைச் சேர்ந்த, 24 வயதுடைய இராஜேந்திரன் நவீந்திரன் உயிரிழந்துள்ளார்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனைகளின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!