சர்வதேச தடைகளை மீறி எண்ணெய்யை விற்ற ஈரானியக் கப்பல்

ஈரானிய எண்ணெய்யை சிரியாவுக்கு விநியோகிப்பதற்கு முயல்வதாகச் சந்தேகிக்கப்பட்ட ஈராணிய எண்ணெய்க் கப்பலான அட்ரியன் டர்யா-1 ஆனது, சர்வதேச தடைகளையும் மீறி தனது எண்ணெய்யை விற்றுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

சிரியக் கரையோரமாக அட்ரியன் டர்யா-1 கடந்த வெள்ளிக்கிழமை காணப்படுவதை செய்மதிப் புகைப்படங்கள் வெளிப்படுத்துவது போலத் தோன்றியிருந்தது.

இந்நிலையில், மத்தியதரைக் கடல் கரையோரத்தில் தரித்து தனது எண்ணெய்யை அட்ரியன் டர்யா 1 கப்பல் ஆனது விநியோகித்துள்ளதாக ஈரானிய வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் அப்பாஸ் முஸாவி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்க-ஈரான் இராஜதந்திர முரண்பாட்டின் காரணமாக குறித்த அட்ரியன் டர்யா-1 கப்பல் காணப்பட்டிருந்தது.

ஜிப்ரால்டர் கரையோரத்தில் இவ்வாண்டு ஜூலை மாதத்தில், பிரித்தானியக் கடற்படைவீரர்களால் கைப்பற்றப்பட்ட அட்ரியன் டர்யா-1 கப்பல் ஆனது ஜிப்ரால்டரில் கடந்த மாதம் 15ஆம் திகதி தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், சிரியாவுக்கு கப்பல் செல்லாது என ஈரான் உறுதிமொழி வழங்கிய பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எவ்வகையான ஈரானிய எண்ணெய்க்கும் ஒரு விலக்களிப்பும் இல்லை என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துல்ள நிலையில், ஈரான் மீது தாங்கள் தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகிப்போம் என ஐக்கிய அமெரிக்க திறைசேரி அதிகாரி சிகல் மன்டெல்கர் கூறியுள்ளார்.

இதேவேளை, அட்ரியன் டர்யா-1 கைப்பற்றப்பட்டதற்கு பதிலடியாக ஈரானால் கைப்பற்றப்பட்டதாக பலர் கருதிய பிரித்தானிய எண்ணெய்க் கப்பலான ஸ்டெனா இம்பெரோ விடுவ்க்கப்படுவதற்கு தயாராவதாக ஈரானிய வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

இறுதிக் கட்ட சட்ட நடைமுறைகளுக்குள்ளால் ஸ்டெனா இம்பெரோ சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் விடுவிக்கப்படுமென அப்பாஸ் முஸாவி கூறியுள்ளார்.

ஸ்டெனா இம்பெரோ ஆனது கடல் சட்டங்களை மீறியதன் காரணமாக இவ்வாண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!