முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் இரத்தத்தில் குளீர்காய்ந்தவர்கள் இன்று தீர்வுபெற்று தருவதாக நாடகம்

இந்த நாட்டில் ஆட்சி செய்கின்ற பெரும்பாண்மை கட்சிகள் இரண்டும் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் தான் நாம் அதனை ஏற்றுக் கொள்கின்றோம் இருந்தும் அதிக கெட்டவனை விட குறைந்தளவு கெட்டவனுடன் இணைந்து செயற்படுவது என்பது காலத்தின் உசிதமான முடிவாக அமைவதுடன் தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான விடயமாக அமையும் என்றதன் அடிப்படையில் குறைந்த கெட்டவனுக்கு முட்டக் கொடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்டபட்ட விநாயகபுரம் கோரைக்களப்பு சக்தி வித்தியாலய பாடசாலையில்; அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட கனிஷ்ட இடைநிலை ஆய்வுகூட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்து இருந்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் ஜக்கிய தேசிய கட்சிக்கு முட்டுக் கொடுத்து ஆட்சியை தக்கவைத்துள்ளது என்றால் இரண்டு கட்சியினரும் கெட்டவர்கள்தான் அதில் குறைந்த கெட்டவர் யார் கூடிய கெட்டவர் யார் என்று ஆராய்ந்து பார்த்த நிலையில் தமிழ் மக்களுக்கான முடிந்தளவு நிம்மதியாக வாழக்கூடிய தீர்வுகளை பெற முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து கொண்டு இருக்கின்றன என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஆட்சிக்கு அழுத்தங்களை கொடுத்தன் விளைவாகத்தான் 75,90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் கல்வி, பொருளாதாரம், வீதி அபிவிருத்திகள் தீர்வு ரீதியான செயற்திட்டங்களுக்கும் இந்த ஜக்கிய தேசிய கட்சி மீது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்த அழுத்தங்களும் ஒத்துழைப்புக்களுமே காரணம் என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வெண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நினைத்திருந்தால் இந்த ஆட்சியை மாற்றி இருக்கலாம் அப்படி செய்திருந்தால் இன்று யார் அட்சியில் இருந்திருப்பார்கள் தமிழ் மக்களின் நிலைமைகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பதனை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஊடக அடக்கு முறைகள், வெள்ளைவேன் கலாசாரம் உட்பட பல அநீதிகளுக்கு இடம்கொடுக்க முடியாது என்றதன் அப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜக்கிய தேசிய கட்சிக்கு அதரவு வழங்கியதுடன் அதன் ஊடாக பல்வேறு துறைசார்ந்த அபிவிருத்திகள் மற்றும் தீர்வை நோக்கிய பயணமும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மேலும் தெரிவித்து இருந்தார்.

பாடசாலை அதிபர் ரி.இந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், கலந்து கொண்டு இந்ததுடன் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.இரவீந்திரன், திருக்கோவில் வலயக் கல்வி பணிமனையின் கல்வி அதிகாரிகள் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்து இருந்தனர்.

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!