மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில், கழிவுப் பொருட்கள் சேகரிப்பு

நுவரெலியா மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத பொருட்களை சேகரிக்கும் வேலைத்திட்டம், இன்று முன்னெடுக்கப்பட்டது.


மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத பொருட்கள் அதிகரிக்கப்பட்டு, சூழல் மாசடைவு ஏற்பட்டதனாலும், களனி கங்கைக்கு செல்லும் இந்த நீரில் மாசுத்தன்மை ஏற்பட்டுள்ளதாலும், இந்த மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்தில், கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும் கழிவுப் பொருட்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, நீர்தேகத்தில் உள்ள பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத நிலையில் காணப்பட்ட பொருட்களை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.

நல்லதண்ணி, மோகினி நீர்வீழ்ச்சி, மறே நீர்வீழ்ச்சி மற்றும் காட்மோர் நீர்வீழ்ச்சி மற்றும் சீத்தகங்குல ஓயா போன்ற பகுதிகளில் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள், மஸ்கெலியா மற்றும் நல்லதண்ணி பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத பொருட்கள், இன்று அகற்றப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தை, நல்லதண்ணி, சீத்தகங்குல கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள், மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தின் பாதுகாப்பு படையினர், கடற்படை அதிகாரிகள், நல்லதண்ணி பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சேகரிக்கப்பட்ட குப்பைகள், மஸ்கெலியா பிரதேச சபையின் சுகாதார பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!