முல்லையில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம் : மக்கள் விசனம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகர் பிரிவிலுள்ள பளம்பாசி கிராம சேவகர் பிரிவில், கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


இரவு வேளைகளில் கிராமத்திற்குள் புகும் காட்டு யானைகள், விவசாய செய்கைகளை அழித்து வருவதோடு பயன்தரும்
மரங்களான மா, பலா, தென்னை, வாழை போன்றவற்றையும் அழித்து சேதப்படுத்தி வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் யானைகள் வீடு புகுந்து வீட்டை உடைத்து சேதப்படுத்தியதோடு, வீட்டுக்குள் இருந்த கச்சான், நெல்லு போன்றவற்றை சேதப்படுத்தியும், உண்டும் வருகின்றன.

இந்நிலையில், அண்மையில் பளம்பாசி கிராமத்தில் காட்டு யானைகளால் இரண்டு வீடுகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீடுகளில் உறங்குவதற்கு அச்சத்தில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தொடர்புபட்ட அதிகாரிகள் மக்களுக்குப் பாதுகாப்பான யானை வேலி அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!