சஜித்திற்கே மக்கள் பலம் உள்ளது : அஜித் பி.பெரேரா

சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக இருக்கின்றோம் என்பதற்காக எங்கள் மீது ஒழுக்காறு நடவடிக்கை எடுக்க முடியாது என அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எங்களுடைய கட்சியில் பலர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய ,சஜித் பிரேமதாஸ போன்றவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இவர்களில் மக்களின் ஆதரவு அதிகமாக இருப்பது சஜித் பிரேமதாசாவுக்கு. அவருக்கு ஆதரவாக செயற்படுவதன் மூலம் எங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க முடியாது, எங்களுடைய கட்சியின் யாப்பில் அப்படி ஒரு சரத்தும் இல்லை.

நான் என்னுடைய முழு ஆதரவை அவருக்கு தெரிவித்திருக்கிறேன், கட்சியின் சில விடயங்களை மக்களுடன் இணைத்து பேசுவது அதற்கு ஆதரவாக நடப்பது ஒன்றும் தவறில்லை, நாங்கள் அனைவரும் ஒன்றினைத்து சஜித்தை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வோம்.

ஐக்கிய தேசிய கட்ச்சியின் பொது செயலாளர் எனக்கு ஒரு கடித்தை அனுப்பியுள்ளார் அதில் சில விடயங்களுக்கு என்னிடம் விளக்கம் கோரியுள்ளார் ஆனால் அவரின் கேள்விகள் தொடர்பில் எனக்கு தெளிவுகள் இல்லை.

எங்கள் மீது ஒழுக்காறு நடவடிக்கைகள் எடுப்பதற்கு தகுந்த காரணங்கள் அதில் இல்லை. நான் ஒரு சட்டத்தரணி எனக்கும் சட்டங்கள் தெரியும் இதுபோன்று கடிதங்கள் அனுப்பவதிலோ அல்லது ஆயுதங்களை காண்பிப்பதாலேயோ எங்களை அசைக்க முடியாது.

எதற்கும் அஞ்சாமல் நாங்கள் நேர்மையாக நடக்கின்றோம் என அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!