மக்கள் வங்கிக்கான திருத்தச் சடட்டம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 19 இல்!

மக்கள் வங்கிக்கான திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தினத்திலேயே வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் வங்கிக்கான சர்ச்சைக்குரிய சட்டமூலம் தொடர்பான விவாதத்தை செப்டம்பர் 4 ம் திகதி நாடாளுமன்றம் முதலில் நடத்தவிருந்தது.

இந்த விவாதத்தினை ஒத்திவைக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் எழுதியதையடுத்து ஒத்திவைக்க அரசாங்கம் முடிவுசெய்தது.

மக்கள் வங்கிக்கான திருத்த சட்டமூலம் தொடர்பாக வங்கித்துறை நிபுணர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.

இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளும் கட்சி, இந்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானித்தது.

இந்நிலையில் தற்போது குழு நிலை விவாதத்தையும் சட்டமூலம் மீதான இறுதி வாக்கெடுப்பையும் 19 ஆம் திகதி நடாத்த கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!