நான் கொள்கைகளை காட்டிக் கொடுக்க மாட்டேன் – கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்த பிரச்னையும் இல்லை, சிலர் நெருக்கடி இருப்பதாக வெளியில் காண்பிப்பதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் கபீர் ஹாஷிம் கூறுகிறார்.

கொழும்பில்இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவுடன் கடந்த சில நாட்களுக்கு முன் எற்பட்ட முரண்பாடு குறித்து பேசிய அவர் கொள்கைகளோடு வேலைசெய்யும் போது, அடிதடியும் எற்படும்
சிலவேளைகளில் , அது வலிக்கும் . வலிக்காமல் இருக்கும் .

என மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள் நான் என் மனசாட்சிக்கு ஏற்ப வேலை செய்கிறேன் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை மக்கள் அறிவார்கள். அது பற்றி மேலும் விளக்க தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்

சரியான விடயங்களுக்கு நாம் எழுந்து நிற்போம் அப்போது எங்களுடைய பதவிகள் இல்லாமல் போகலாம் , நடு வீதியிலும் தள்ளிவிடும் சூழ்நிலை ஏற்படும் என்றும் இதன் போது அமைச்சர் தெரிவித்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!