இராணுவத் தளபதி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்

இலங்கை இராணுவத்தில் புதிதாக பதவியேற்ற இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை இம் மாதம் (8) ஆம் திகதி மேற்கொண்டார்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அனுர ஜயசேகர வரவேற்றார். பின்னர் இராணுவ தளபதியவர்களுக்கு கஜபா படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

மேலும் இராணுவ தளபதியின் வருகையை நினைவு படுத்தும் முகமாக இராணுவ தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டன. பின்பு இராணுவ தளபதியினால் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டன. இதன் போது ஏப்ரல் மாதம் 21 திகதி உதிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்பு படையினர் மிகவும் அர்ப்பணிப்புடன் இந்த பிரதேசங்களில் கடமைகளை மேற்கொள்கின்றனர் என்று படையினர்களை இராணுவ தளபதி பாராட்டினார்.

பின்னர் கிழக்கு பிரதேசங்களுக்கு பொறுப்பாயுள்ள படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளுடன் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை இராணுவ தளபதி கலந்துரையாடினார்.

இறுதியில் இராணுவ தளபதி குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!