வடக்கின் சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

ஐனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தெற்கில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அந்தக் குழப்பங்கள் தீர்ந்து வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்ட பின்னர் நாங்கள் சரியானதொரு முடிவை எடுப்போம் என வடக்கு மாகாண அவைத் தலைவரும் மாகாண முன்னாள் உறுப்பினர்களின் அமையத்தின் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வுடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர்களின் அமையத்தில் சந்திப்பொன்று கைதடியில் அமைந்துள்ள மாகாண பேரவைச் செயகத்தில் பேரவைத் தலைவரும் மேற்படி அமையத்தின் தலைவருமான சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக் கலந்தரையாடலின் முடிவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஐனாதிபத் தேர்தல் குறித்தான் அமையத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்த வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது.

ஐனாதிபதித் தேர்தலொன்று நடைபெறப் போவதாகச் சொல்லப்படுகின்றது. அயினும் தேர்தல் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அத் தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் இன்னும் சில வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருக்கின்றனர். ஆகவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் தெற்கில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அந்தக் குழப்பங்கள் தீர்க்கப்பட்டு வேட்பாளர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்ட பின்னரே அவை தொடர்பில் ஆராந்து அது குறித்து நாம் ஒரு முடிவெடுக்க முடியும்.

குறிப்பாக தமிழ்த் தேசிய மக்களுடைய பிரச்சனைகளை தொடர்ச்சியான அபிவலாசைகளை புர்த்தி செய்யக் கூடிய அதாவது தமிழ்த் தேசிய இனம் தன்னுடைய கலை, கலாச்சார, மொழி, மதம,; நிலம,; அரசியல் உரிமை என்பதை ஒரு கட்டமைப்பிற்குள்ளே அதாவது பிரிக்கப்படாத நாட்டிற்குள்ளே ஒரு சுயாட்சி முறையினை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடாக இருக்கின்றது.

ஆகவே அதனை யார் உறுதிப்படுத்தி முன்வைக்கிறார்களோ அதை எங்ககளுக்கும் சொல்லி அதை தெற்கிலும் யார் தைரியமாகச் சொல்லிச் செயற்படுகிறார்களோ அவர்களுடைய கூற்றின் அடிப்படையில் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுப்பாம் என தெரிவித்ததுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!