அம்பாறை இறக்காமம் வில்லுக்குளத்தில், மீன் குஞ்சுகள் விடுவிப்பு

அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வில்லுக்குளத்தில் நன்னீர் மீன்பிடியை அபிவிருத்தி செய்வதற்காக, கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களத்தினால் 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் இடும் நிகழ்வு இன்று நடைபெற்றன.


அம்பாறை மாவட்ட மீன்பிடி உத்தியோகத்தர் எம்.எல்.எம்.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளிகள் பணியக தவிசாளருமான எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் ஜே.கலிலுர்றஹ்மான் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நன்னீர் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இறக்காமம் வில்லுக்குளத்தின் நன்னீர் மீன்பிடியில் பதிவு செய்யப்பட்ட நான்கு சங்கங்கள் ஊடாக சுமார் 400 மீன்பிடி தொழிலாளர்கள் தங்களது ஜீவனோபாயத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்குளத்தினை சிலர் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வருவதனாலும், அசுத்தமான கழிவுகளை கொட்டி வருவதனாலும் பெரும் பதிப்புக்குள்ளாகி வரும் அதேவேளை, தொடரும் கடும் வரட்சியின் காரணமாக குளத்திலுள்ள மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் அழிந்து செல்லும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

இவர்களின் தொழில் பாதிப்பை நிவர்த்திக்கும் வகையில், கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்களம் 60 ஆயிரம் மீன் குஞ்சுகளை வழங்கி உதவியுள்ளது.

‘திலாப்பியா’ எனும் மீனினமானது சுமார் 6 மாதங்களின் பின்னர் உணவுக்குப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என இதன் போது தெரிவிக்கப்பட்டது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!